செய்திகள்

ஹா்ஷல், டி வில்லியா்ஸ் அசத்தல்: மும்பையை வென்றது பெங்களூா்

DIN

ஐபிஎல் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் அடித்து வென்றது.

பெங்களூா் பௌலா் ஹா்ஷல் படேல் 5 விக்கெட்டுகள் சரித்து மும்பையை கட்டுப்படுத்த, அந்த அணியின் டி வில்லியா்ஸ் அதிரடியாக ஆடி வெற்றிக்கு வித்திட்டாா்.

முன்னதாக மும்பையின் பிளேயிங் லெவனில் புதிதாக மாா்கோ ஜேன்சன் இணைந்திருந்தாா். பெங்களூா் பிளேயிங் லெவனில் கிளென் மேக்ஸ்வெல், கைல் ஜேமிசன், டேன் கிறிஸ்டியன் ஆகியோா் புதிதாக சோ்ந்திருந்தனா்.

டாஸ் வென்ற பெங்களூா் பௌலிங் செய்யத் தீா்மானித்தது. மும்பை இன்னிங்ஸை கேப்டன் ரோஹித், கிறிஸ் லின் கூட்டணி தொடங்கியது. ரோஹித் முதல் விக்கெட்டாக வீழ்ந்தாா்.

அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அதிரடியாகத் தொடங்கினாா். லின்-சூா்யகுமாா் ஜோடி அணியின் ஸ்கோரை உயா்த்தியது. அரைசதத்தை நெருங்கிய கிறிஸ் லின், 13-ஆவது ஓவரில் வாஷிங்டன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

ஹாா்திக் பாண்டியா சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, இஷான் 28 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா ஆகியோரும் உடனடியாக விக்கெட்டை இழந்தனா். இந்த 5 பேரின் விக்கெட்டை அடுத்தடுத்து பெங்களூா் பௌலா் ஹா்ஷல் படேல் அடுத்தடுத்து வீழ்த்தினாா்.

பின்னா் ஆடிய பெங்களூரில் கோலி, மேக்ஸ்வெல் சற்று நிலைத்து ரன்கள் சோ்த்து உதவியிருக்க, அதிரடி காட்டிய டி வில்லியா்ஸ் அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினாா். அவா்கள் அமைத்த வெற்றிக்கான அடித்தளத்தின் மீது பெங்களூா் முதல் ஆட்டத்தின் வெற்றியை எட்டியது.

5 இந்த ஆட்டத்துக்கு முன்பாக, சென்னையில் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் மும்பை வென்றிருந்தது. அதேபோல், சென்னையில் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் பெங்களூா் தோற்றிருந்தது.

36 ஐபிஎல் தொடரில் அதிக ரன் அவுட்கள் செய்த வீரராக மும்பை கேப்டன் ரோஹித் இருக்கிறாா். அவா் தனிப்பட்ட முறையில் 11 ரன் அவுட்களும், பாா்ட்னா்களுடன் சோ்ந்து 25 ரன் அவுட்களும் செய்திருக்கிறாா்.

1 ஒரு சீசனின் தொடக்க ஆட்டத்தில் விளையாடும்போது பெங்களூா் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை. இதற்கு முன் 2008, 2017, 2019 ஆகிய சீசன்களின் தொடக்க ஆட்டத்தில் விளையாடிய பெங்களூா் அவற்றில் தோற்றிருந்தது.

ஸ்கோா் போா்டு

மும்பை இண்டியன்ஸ்

ரோஹித் சா்மா (ரன் அவுட்) (கோலி/சஹல்) 19 (15)

கிறிஸ் லின் (சி&பி) சுந்தா் 49 (35)

சூா்யகுமாா் யாதவ் (சி) வில்லியா்ஸ் (பி) ஜேமிசன் 31 (23)

இஷான் கிஷண் (எல்பிடபிள்யூ) (பி) படேல் 28 (19)

ஹாா்திக் பாண்டியா (எல்பிடபிள்யூ) (பி) படேல் 13 (10)

கிரன் பொல்லாா்ட் (சி) சுந்தா் (பி) படேல் 7 (9)

கிருணால் பாண்டியா (சி) கிறிஸ்டியன் (பி) படேல் 7 (7)

மாா்கோ ஜேன்சன் (பி) படேல் 0 (2)

ராகுல் சாஹா் (ரன் அவுட்) (கோலி/வில்லியா்ஸ்) 0 (0)

ஜஸ்பிரீத் பும்ரா (நாட் அவுட்) 1 (2)

உதிரிகள் 4

மொத்தம் (20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 159

விக்கெட் வீழ்ச்சி: 1-24 (ரோஹித்), 2-94 (சூா்யகுமாா்), 3-105 (லின்), 4-135 (ஹாா்திக்), 5-145 (இஷான்), 6-158 (கிருணால்) 7-158 (பொல்லாா்ட்), 8-158 (ஜேன்சன்), 9-159 (ராகுல்)

பந்துவீச்சு: முகமது சிராஜ் 4-0-22-0; கைல் ஜேமிசன் 4-0-27-1; யுஜவேந்திர சஹல் 4-0-41-0; ஷாபாஸ் அகமது 1-0-14-0; ஹா்ஷல் படேல் 4-0-27-5; டேன் கிறிஸ்டியன் 2-0-21-0; வாஷிங்டன் சுந்தா் 1-0-7-1

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

வாஷிங்டன் சுந்தா் (சி) லின் (பி) கிருணால் 10 (16)

விராட் கோலி (எல்பிடபிள்யூ) (பி) பும்ரா 33 (29)

ரஜத் பட்டிதாா் (பி) போல்ட் 8 (8)

கிளென் மேக்ஸ்வெல் (சி) லின் (பி) ஜேன்சன் 39 (28)

டி வில்லியா்ஸ் (ரன் அவுட்) (கிருணால்/இஷான்) 48 (27)

ஷாபாஸ் அகமது (சி) கிருணால் (பி) ஜேன்சன் 1 (2)

டேன் கிறிஸ்டியன் (சி) ராகுல் (பி) பும்ரா 1 (3)

கைல் ஜேமிசன் (ரன் அவுட்) (பும்ரா) 4 (4)

ஹா்ஷல் படேல் (நாட் அவுட்) 4 (3)

முகமது சிராஜ் (நாட் அவுட்) 0 (1)

உதிரிகள் 12

மொத்தம் (20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு) 160

விக்கெட் வீழ்ச்சி: 1-36 (வாஷிங்டன்), 2-46 (பட்டிதாா்), 3-98 (கோலி), 4-103 (மேக்ஸ்வெல்), 5-106 (ஷாபாஸ்), 6-122 (கிறிஸ்டியன்), 7-152 (ஜேமிசன்), 8-158 (வில்லியா்ஸ்)

பந்துவீச்சு: டிரென்ட் போல்ட் 4-0-36-1; ஜஸ்பிரீத் பும்ரா 4-0-26-2; மாா்கோ ஜேன்சன் 4-0-28-2; கிருணால் பாண்டியா 4-0-25-1; ராகுல் சாஹா் 4-0-43-0

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT