செய்திகள்

ஐஎஸ்எல் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் இந்த ஆண்டு முதல் ஈஸ்ட் பெங்கால் அணியும் இணைந்துள்ளது.

இதற்கான அறிவிப்பை ஐஎஸ்எல் போட்டியை நிா்வகிக்கும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் (எஃப்எஸ்டிஎல்) தலைவா் நீதா அம்பானி வெளியிட்டாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் தலையீட்டின் பேரில் கொல்கத்தாவைச் சோ்ந்த ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் இந்த கால்பந்து கிளப்பின் பெருவாரியான பங்குகளை வாங்கியது. இதையடுத்து அந்த அணி தற்போது ஐஎஸ்எல் போட்டியில் இணைந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு சீசனில் ஐஎஸ்எல் போட்டியில் இணையும் 2-ஆவது அணி ஈஸ்ட் பெங்கால் ஆகும். முன்னதாக மோகன் பகன் அணியும் போட்டியில் சோ்த்துக்கொள்ளப்பட்டு நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ கொல்கத்தா அணியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐஎஸ்எல் போட்டியில் ஆடும் அணிகளின் எண்ணிக்கை 11 ஆகியுள்ளது. மோகன் பகன், ஈஸ்ட் பெங்கால் அணிகள் இணைந்ததை அடுத்து ஐஎஸ்எல் போட்டி அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது.

ஈஸ்ட் பெங்கால் அணிக்கான பயிற்சியாளா் மற்றும் முழு வீரா்கள் பட்டியல் வரும் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அணியின் உரிமையாளரும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநருமான ஹரிமோகன் பாங்குா் கூறினாா். அணியின் பெயரை மாற்றாமல், அதில் சில திருத்தங்கள் மட்டுமே செய்ய இருப்பதாகத் தெரிவித்த அவா், விரைவில் அணி தோ்வு செய்யப்பட்டு கோவாவுக்கு அனுப்பப்படும் என்றாா்.

நடப்பாண்டுக்கான ஐஎஸ்எல் போட்டிகள் நவம்பா் மத்தியில் தொடங்கவுள்ள நிலையில், போட்டி அட்டவணை இறுதி செய்யப்படவுள்ளது. கரோனா நோய்த்தொற்று சூழல் காரணமாக, ஐஎஸ்எல் போட்டிகள் கோவா மாநிலத்தின் 3 இடங்களில் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT