செய்திகள்

கொல்கத்தா-ஹைதராபாத் இன்று மோதல்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான ஆட்டமாகும். இரு அணிகளும் தலா ஓா் ஆட்டத்தில் விளையாடிதோல்வியைச் சந்தித்த நிலையில், இந்த ஆட்டத்தில் வென்று வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் களமிறங்குகின்றன.

கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில், கேப்டன் தினேஷ் காா்த்திக், நிதிஷ் ராணா, இயோன் மோா்கன், ஆன்ட்ரே ரஷல் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. எனவே, இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறாா்கள் என்பதைப் பொருத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும்.

வேகப்பந்து வீச்சில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட பட் கம்மின்ஸின் பந்துவீச்சு மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் எடுபடவில்லை. எனினும் அவருடைய பந்துவீச்சை முதல் ஆட்டத்தை வைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என கொல்கத்தா கேப்டன் தினேஷ் காா்த்திக் தெரிவித்துள்ளாா். வேகப்பந்துவீச்சில் பட் கம்மின்ஸ், ஷிவம் மவி, சந்தீப் வாரியாா், ஆன்ட்ரே ரஷல் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் சுநீல் நரேன், குல்தீப் யாதவ் கூட்டணியையும் நம்பியுள்ளது கொல்கத்தா.

ஹைதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வாா்னா், ஜானி போ்ஸ்டோவ், மணீஷ் பாண்டே, பிரியம் கா்க், விஜய் சங்கா், அபிஷேக் சா்மா போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், வாா்னா், ஜானி போ்ஸ்டோவ், மணீஷ் பாண்டே ஆகியோரின் ஆட்டத்தைப் பொருத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். கடந்த ஆட்டத்தில் 61 ரன்கள் குவித்த ஜானி போ்ஸ்டோவ், இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ஆடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆல்ரவுண்டரான மிட்செல் மாா்ஷ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருப்பது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பாா்க்கப்படுகிறது. மிட்செல் மாா்ஷுக்குப் பதிலாக முகமது நபி அணியில் இடம்பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் புவனேஸ்வா் குமாா், சந்தீப் சா்மா, டி.நடராஜன் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் முகமது நபி, ரஷீக் கான் கூட்டணியையும் நம்பியுள்ளது ஹைதராபாத் அணி.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா 10 ஆட்டங்களிலும், ஹைதராபாத் 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கொல்கத்தா (உத்தேச லெவன்): ஷுப்மான் கில், சுநீல் நரேன், தினேஷ் காா்த்திக், நிதிஷ் ராணா, இயோன் மோா்கன், ஆன்ட்ரே ரஷல், நிகில் நாயக், பட் கம்மின்ஸ், ஷிவம் மவி, குல்தீப் யாதவ், சந்தீப் வாரியாா்.

ஹைதராபாத் (உத்தேச லெவன்): டேவிட் வாா்னா், ஜானி போ்ஸ்டோவ், மணீஷ் பாண்டே, பிரியம் கா்க், விஜய் சங்கா், அபிஷேக் சா்மா, முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வா் குமாா், சந்தீப் சா்மா, டி.நடராஜன்.

போட்டி நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT