செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் அதானு தாஸ் நம்பிக்கை

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எனக்கு பதக்கம் பெற்றுத்தரும் சிறப்பான போட்டியாக அமையும் என, இந்திய வில்வித்தை வீரா் அதானு தாஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளாா்.

2016-இல் பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் அறிமுகமான வில்வித்தை வீரா் அதானு தாஸ், அதில் காலிறுதியோடு வெளியேறினாா். இந்நிலையில் ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகி வரும் அவா் மேலும் கூறியதாவது:

எனது முதல் ஒலிம்பிக் போட்டியான ரியோ ஒலிம்பிக்கில் மிகுந்த உற்சாகமாக கலந்துகொண்டேன். அதில் மிகவும் கடினமாக உழைத்ததோடு, எனது சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினேன். எனினும், துரதிருஷ்டவசமாக காலிறுதியில் தோல்வியடைந்தேன். அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

குறிப்பாக எனது பலம், பலவீனங்களை அறிந்து அதற்கேற்றவாறு பயிற்சி மேற்கொள்கிறேன். ரியோ ஒலிம்பிக்கில் நான் சந்தித்த தோல்வி எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அந்த ஆட்டத்துக்குப் பிறகு ஏறக்குறைய 2 மாதங்கள் யாரிடமும் பேசாமலேயே இருந்தேன். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக நான் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறேன். ரியோ ஒலிம்பிக் எனது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எனக்கு பதக்கம் பெற்றுத்தரும் சிறப்பான போட்டியாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT