செய்திகள்

ஒருநாள் தரவரிசை: முதல் இரு இடங்களில் தொடர்ந்து நீடிக்கும் கோலி & ரோஹித்

17th Sep 2020 03:12 PM

ADVERTISEMENT

 

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் கோலி, ரோஹித் ஆகிய இரு இந்திய வீரர்களும் முதல் இரு இடங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்கள்.

871 புள்ளிகளுடன் கோலி முதல் இடத்திலும் 855 புள்ளிகளுடன் ரோஹித் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்த பேர்ஸ்டோவ் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். 

3-வது ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்த மேக்ஸ்வேல், கேரி ஆகியோர் முறையே 26-வது இடத்திலும் 28-வது இடத்திலும் உள்ளார்கள். 

ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இங்கிலாந்தில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியுள்ளன. டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. 2-ம் ஒருநாள் ஆட்டத்தை 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. 3-ம் ஒருநாள் ஆட்டத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் தரவரிசை: பேட்ஸ்மேன்கள்

1. கோலி
2. ரோஹித் சர்மா
3. பாபர் அசாம்
4. ராஸ் டெய்லர்
5. டு பிளெசிஸ்
 

Tags : Virat Rohit
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT