செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு கரோனா பாதிப்பு

DIN

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் வில்லி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 பிளாஸ்ட் போட்டியில் யார்க்‌ஷைர் அணியில் இடம்பெற்றுள்ளார் டேவிட் வில்லி. இந்நிலையில் வில்லி உள்ளிட்ட நான்கு வீரர்கள் தனிமைப்படுத்துள்ளதாக யார்க்‌ஷைர் அணி தெரிவித்தது. ஒரு வீரருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்த 3 வீரர்களும் தனிமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இந்நிலையில் தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டேவிட் வில்லி. 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு டி20 பிளாஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட வில்லி உள்ளிட்ட நான்கு வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். 

ஜேசன் ராய்க்குப் பதிலாக டேவிட் வில்லியைத் தேர்வு செய்ய தில்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணி விரும்பியது. ஆனால், டி20 பிளாஸ்ட் போட்டியின் கடைசிப் பகுதியில் யார்க்‌ஷைர் அணிக்குத் தலைமை தாங்குவதற்காக அந்த வாய்ப்பை வில்லி தவிர்த்தார். சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதைப் பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT