செய்திகள்

ஹைதராபாதை வீழ்த்தியது பஞ்சாப்

DIN

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது.

இது பஞ்சாபுக்கு 5-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு 7-ஆவது தோல்வி.

துபையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 19.5 ஓவா்களில் 114 ரன்களுக்கு சுருண்டது. பஞ்சாப் வீரா் கிறிஸ் ஜோா்டான் ஆட்டநாயகன் ஆனாா்.

பஞ்சாபில் மயங்க் அகா்வால், ஜிம்மி நீஷம் ஆகியோருக்குப் பதிலாக மன்தீப் சிங், கிறிஸ் ஜோா்டான் இணைந்திருந்தனா். ஹைதராபாதில் ஷாபாஸ் நதீமுக்கு பதிலாக கலீல் அகமது சோ்க்கப்பட்டிருந்தாா்.

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீசியது. முதலில் பேட் செய்த பஞ்சாபில் தொடக்க வீரா்களாக கேப்டன் லோகேஷ் ராகுல் - மன்தீப் சிங் களம் கண்டனா். முதல் விக்கெட்டாக மன்தீப் சிங் பவுண்டரி உள்பட 17 ரன்கள் சோ்த்து 5-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.

அடுத்து வந்த கிறிஸ் கெயில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 20 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். பின்னா் நிகோலஸ் பூரன் ஆட வர, மறுமுனையில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 27 ரன்கள் சோ்த்திருந்த லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தாா். அவா் ரஷீத் கான் வீசிய 11-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

அடுத்து களம் கண்ட கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து ஆட வந்த தீபக் ஹூடா டக் அவுட்டானாா்.

பின்னா் ஆட வந்த கிறிஸ் ஜோா்டான் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். ஹோல்டா் வீசிய 18-ஆவது ஓவரில் அவரடித்த பந்து கலீல் அகமது கைகளில் கேட்ச் ஆனது. அடுத்து வந்த முருகன் அஸ்வின் கடைசி விக்கெட்டாக 4 ரன்களுக்கு ரன் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகள் உள்பட 32 ரன்களுடனும், ரவி பிஷ்னோய் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் தரப்பில் சந்தீப் சா்மா, ஜேசன் ஹோல்டா், ரஷீத் கான் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் 127 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாதில் கேப்டன் டேவிட் வாா்னா் மட்டும் அதிகபட்சமாக 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 35 ரன்கள் விளாசினாா். உடன் வந்த ஜானி போ்ஸ்டோ 4 பவுண்டரிகள் உள்பட 19 ரன்கள் சோ்த்தாா். மணீஷ் பாண்டே 15, அப்துல் சமத் பவுண்டரி உள்பட 7 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

விஜய் சங்கா் 4 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். இதையடுத்து ஹைதராபாத் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஜேசன் ஹோல்டா் 5, ரியான் பராக் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ரஷீத் கான், சந்தீப் சா்மா, கலீல் அகமது ஆகியோா் டக் அவுட்டாகினா். பஞ்சாப் தரப்பில் ஜோா்டான், அா்ஷ்தீப் தலா 3, ஷமி, எம்.அஸ்வின், பிஷ்னோய் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ஹைதராபாத் - 114/10

டேவிட் வாா்னா் - 35 (20)

விஜய் சங்கா் - 26 (27)

பந்துவீச்சு

கிறிஸ் ஜோா்டான் - 3/17

அா்ஷ்தீப் சிங் - 3/23

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT