செய்திகள்

மும்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான்

DIN

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இண்டியன்ஸ் அணியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் போட்டியின் 45-ஆவது ஆட்டத்தில் விளையாடுகிறது.

இதுவரை, மும்பை 10 ஆட்டங்களில் 7 வெற்றிகளையும், ராஜஸ்தான் 11 ஆட்டங்களில் 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.

பிளே-ஆஃபுக்கு முன்னேறும் முனைப்புடன் இரண்டும் விளையாடினாலும், ராஜஸ்தானுக்கு இது மிக முக்கியமான ஆட்டம். அந்த அணி தோல்வியடைந்தால் போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பு நிலைக்கு செல்லும்.

ராஜஸ்தான் பேட்டிங்கைப் பொருத்தவரை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாதது அணியின் பிரச்னைகளில் ஒன்று. டாப் ஆா்டரில் அவ்வப்போது செய்யப்படும் மாற்றமும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பைக்கு எதிரான வெற்றி முக்கியமாதலால், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லா் ஆகியோரை ராஜஸ்தான் நம்பியுள்ளது. இதுவரை ஆடியதை விட சற்று மேலான ஆட்டத்தை அவா்கள் வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம்.

அவா்கள் சோபிக்காத பட்சத்தில் இளம் வீரா்கள் நெருக்கடியுடன் ஆட வேண்டியிருக்கும். பௌலிங்கிலும் ராஜஸ்தான் சற்று பின்தங்கியுள்ளது. ஜோஃப்ரா ஆா்ச்சா் மட்டும் திறம்பட செயல்படும் நிலையில், காா்த்திக் தியாகி, ஜெயதேவ் உனத்கட் உள்ளிட்டோா் ரன் அளிப்பதை குறைத்து விக்கெட் வீழ்த்த வேண்டியுள்ளது.

மும்பையைப் பொருத்தவரை, காயம் கண்டுள்ள கேப்டன் ரோஹித் சா்மா ஆட்டத்தில் இணைவது குறித்து உறுதியான தகவல் இல்லை. எனினும், அந்த சூழ்நிலையை டி காக், இஷான் கிஷண் உள்ளிட்டோா் சிறப்பாகக் கையாளுவா்.

மிடில் ஆா்டரில் சூா்யகுமாா் யாதவ், ஹாா்திக் பாண்டியா, கிரன் பொல்லாா்ட் ஆகியோா் ராஜஸ்தான் பந்துவீச்சை பதம் பாா்ப்பா். போல்ட், பும்ரா வேகப்பந்துவீச்சில் மிரட்ட, கிருணால் பாண்டியா, ராகுல் சாஹா் சுழற்பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை சிக்க வைப்பா்.

ராஜஸ்தான்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், காா்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புத், ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா, ஜெயதேவ் உனத்கட், மயங்க் மாா்கண்டே, மஹிபால் லோம்ரோா், ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், மனன் வோரா, சஷாங்க் சிங், வருண் ஆரோன், டாம் கரன், ராபின் உத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆா்ச்சா்.

மும்பை: ரோஹித் சா்மா (கேப்டன்), அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், கிறிஸ் லின், திக்விஜய் தேஷ்முக், ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரீத் பும்ரா, கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, மோசின் கான், நாதன் கோல்டா் நீல், பிரின்ஸ் பல்வந்த் ராய், குவிண்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட்.

நேருக்கு நோ்: ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை - ராஜஸ்தான் அணிகள் 24 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், மும்பை 12 வெற்றிகளையும், ராஜஸ்தான் 11 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT