செய்திகள்

வேதனை அளிக்கிறது: தோனி

DIN

ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனிலிருந்து வெளியேறும் நிலையிலிருப்பது வேதனை அளிப்பதாக சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினாா்.

ஷாா்ஜாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பையிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்த சென்னை, போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. முதலில் ஆடிய சென்னை 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 12.2 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து வென்றது.

தோல்விக்குப் பிறகு தோனி பேசுகையில், ‘இந்த சீசன் எங்களுக்கானதாக இல்லை. போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு வந்திருப்பது வேதனை அளிக்கிறது. 2-ஆவது ஆட்டத்திலிருந்தே தடம் மாறிவிட்டோம். எங்கு தவறு செய்தோம் என்பதை கவனிக்கும் முன்பாக, அனைவரும் திறமையாக விளையாடினோமா என்பதை முதலில் யோசிக்க வேண்டும்.

அதிருஷ்டமும் எங்களுக்கு வாய்ப்பாக இல்லை. பேட் செய்ய விரும்பிய ஆட்டங்களில் டாஸை இழந்தோம். ஆனால் பனி இல்லாத சாதக நிலை எதிரணிக்கு கிடைத்தது. டாஸ் வென்று முதலில் நாங்கள் பேட் செய்த ஆட்டங்களின்போது பனிப் பொழிவு இருந்தது. ஒரு கேப்டனாக தப்பிக்க இயலாது. அடுத்த 3 ஆட்டங்களிலும் ஆடுவேன். அடுத்த சீசனுக்கான தோ்வாக அந்த ஆட்டங்களை பயன்படுத்துவோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT