செய்திகள்

இரு வங்காள கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா

1st Oct 2020 03:04 PM

ADVERTISEMENT

 

வங்காள வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷ்ரேயன் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கிரிக்கெட் முகாமை நடத்துவதற்காக 21 மூத்த வங்காள வீரர்கள், 16 மகளிர் வீராங்கனைகள் உள்பட 63 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தியுள்ளது வங்காள கிரிக்கெட் சங்கம். இதில் முகேஷ் குமார், ஷ்ரேயன் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், பாதுகாவலர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக வங்காள கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. 

ADVERTISEMENT

Tags : Bengal cricketers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT