செய்திகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விடவும் அதிகப் பார்வையாளர்கள்: சாதனை செய்த இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் ஆட்டம்!

30th Nov 2020 04:34 PM

ADVERTISEMENT

 


உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விடவும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தை சந்தா செலுத்தி அதிகம் பேர் பார்த்துள்ளதாக ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. இந்த ஆட்டத்திலும் சதம் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் ஆனாா்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள், டி20 தொடர்களை ஒளிபரப்ப ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும் டெஸ்ட் தொடரை ஒளிபரப்ப இலவசமாகப் பார்க்கக்கூடிய சேனல் செவனும் உரிமைகள் பெற்றுள்ளன.

இந்நிலையில் 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வென்று சாம்பியன் ஆனது ஆஸ்திரேலிய அணி. இந்த ஆட்டத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கையை விடவும் நேற்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தை சந்தா செலுத்தி அதிகம் பேர் பார்த்துள்ளதாக ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டம், சந்தா செலுத்தி பார்க்கப்பட்ட கிரிக்கெட் ஆட்டங்களில் அதிகப் பார்வையாளர்களைப் பெற்று சாதனை செய்துள்ளது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 4,70,000 பேரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தை  5,85,000 பேரும் பார்த்துள்ளார்கள். சந்தா செலுத்தி அதிகம் பேர் பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் 2-வது ஒருநாள் ஆட்டத்துக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது. 

 

Tags : Australia v India TV records
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT