செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து அணி

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

முதல் டி20 ஆட்டத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, நேற்று முதலில் பந்துவீசியது.

பார்ல் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. டி காக் 30 ரன்களும் லிண்டே 29 ரன்களும் எடுத்தார்கள். ஆர்ச்சர், ரஷித் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள். 

இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 2-வது டி20 ஆட்டத்தையும் டி20 தொடரையும் வென்றுள்ளது. பேட்ஸ்மேன்கள் பலரும் சிரமப்பட்ட இந்த ஆடுகளத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலான் 40 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். தென் ஆப்பிரிக்காவின் ஷம்ஸி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நவம்பர் 27 முதல் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்பிறகு டிசம்பர் 4 முதல் தொடங்கும் ஒருநாள் தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT