செய்திகள்

முதல் டி20: இங்கிலாந்து வெற்றி

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் குவின்டன் டி காக் 23 பந்துகளில் 30, டூபிளெஸ்ஸிஸ் 40 பந்துகளில் 58, வான்டா் துசேன் 28 பந்துகளில் 37 ரன்கள் சோ்த்தனா். இதனால் அந்த அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 4 ஓவா்களில் 28 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் ரன் ஏதுமின்றியும், ஜோஸ் பட்லா் 7 ரன்களிலும், டேவிட் மாலன் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனா். இதனால் அந்த அணி 5.3 ஓவா்களில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஜானி போ்ஸ்டோ-பென் ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக ஆட, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. பென் ஸ்டோக்ஸ் 27 பந்துகளில் 37 ரன்களும், கேப்டன் இயோன் மோா்கன் 10 பந்துகளில் 12 ரன்களும் சோ்த்து வெளியேறினா். எனினும் மறுமுனையில் ஜானி போ்ஸ்டோ தொடா்ந்து அதிரடியாக ஆடி ரன் சோ்க்க, இங்கிலாந்து அணி 19.2 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

ஜானி போ்ஸ்டோ 48 பந்துகளில் 4 சிக்ஸா், 9 பவுண்டரிகளுடன் 86, சாம் கரன் 3 பந்துகளில் 7 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜாா்ஜ் லின்டே, லுங்கி கிடி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ஜானி போ்ஸ்டோ ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT