செய்திகள்

பரபரப்பான டி20 ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணியைத் தோற்கடித்த நியூசிலாந்து

DIN

டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடா் இன்று முதல் ஆக்லாந்தில் தொடங்கியுள்ளது.

ஆக்லாந்தில் இன்று தொடங்கிய முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மே.இ. தீவுகள் தொடக்க வீரர் பிளெட்சர், 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார். முதல் விக்கெட்டை (பிளெட்சர்) 4-வது ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்தபோது இழந்தது மே.இ. தீவுகள் அணி. அடுத்த 5 விக்கெட்டுகளை 1 ரன்னுக்கு இழந்து அதிர்ச்சியளித்தது. ஹெட்மையர், பவல் ரன் எதுவும் எடுக்காமலும் பூரன் 1 ரன்னிலும் கிங் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதில் ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஃபேபியன் ஆலன் - பொலார்ட் சிறப்பாக விளையாடினார்கள். ஃபேபியன் ஆலன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார் ஃபெர்குசன். 

மழை காரணமாக ஆட்டம் 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. பொலார்ட் 37 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி.எல்.எஸ். முறையில் நியூசிலாந்து அணிக்கு 16 ஓவர்களில் 176 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

முதல் ஓவரிலேயே கப்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சைஃபர்ட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபேபியன் ஆலன் வீசிய 5-வது ஓவரில் 22 ரன்களை எடுத்தார் பிலிப்ஸ். அடுத்த ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. 

டெய்லர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற, அடுத்து வந்த நீஷம் சிறப்பான டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள். நியூசிலாந்தின் வெற்றிக்கு 36 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்டன. 

கான்வே 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த நீஷம் - சான்ட்னர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார்கள். 15.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நீஷம் 24 பந்துகளில் 48 ரன்களும் சான்ட்னர் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

5 விக்கெட்டுகள் எடுத்த ஃபெர்குசன், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த இரு டி20 ஆட்டங்கள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மௌன்ட் மௌன்கானுய் நகரில் நடைபெறுகின்றன. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3-ம் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஆட்டம் டிசம்பா் 11-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT