செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம் வேண்டும்: சச்சின் கோரிக்கை

DIN

ஒருநாள் கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ஐசிசி அமைப்பு வெளியிட்ட ட்வீட்டின் மூலம் ஒரு விவாதம் உருவாகியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் + செளரவ் கங்குலி:

கூட்டணி - 176
ரன்கள் - 8,227
சராசரி - 47.55

வேறு எந்த ஜோடியும் ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்களைக் கூட கடந்ததில்லை என ஐசிசி ட்வீட் வெளியிட்டிருந்தது.

இதைப் பார்த்த சச்சின் இவ்வாறு ட்வீட் வெளியிட்டார்.

இது பழைய ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது கங்குலி.

வட்டத்துக்கு வெளியே நான்கு வீரர்கள் மட்டுமே இருக்கவேண்டும், 2 புதிய பந்துகள் போன்ற விதிமுறைகளால் நாம் மேலும் எத்தனை ரன்கள் சேர்த்திருப்போம் என்று கங்குலியிடம் கேட்டார்.

இதற்குப் பதில் அளித்த கங்குலி, மேலும் 4000 ரன்கள் அல்லது அதற்கு மேலும். 2 புதிய பந்துகள்... வாவ்! முதல் ஓவரைப் போல மீதமுள்ள 50 ஓவர்களிலும் கவர் டிரைவ் மூலம் பந்து பவுண்டரிக்குச் செல்லும் சத்தம் கேட்கிறது என்றார்.

தற்போதைய ஒருநாள் ஆட்டங்களில் ஒவ்வொரு முனையிலிருந்தும் புதிய பந்துகள் என 50 ஓவர்களுக்கு இரு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஃபீல்டிங் கட்டுப்பாடுகளில் மூன்று பவர்பிளேக்கள் உள்ளன. முதல் 10 ஓவர்களுக்கு வட்டத்தைத் தாண்டி 2 வீரர்கள் மட்டுமே நிற்கவேண்டும். 11-40 ஓவர்களுக்கு வட்டத்துக்கு வெளியே நான்கு ஃபீல்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடைசி 10 ஓவர்களுக்கு வட்டத்துக்கு வெளியே 5 ஃபீல்டர்களுக்கு அனுமதி உண்டு.

சச்சினின் பதிலுக்கு எதிர்வினையாற்றிய ஹர்பஜன் சிங் இவ்வாறு கூறினார்:

நீங்கள் இருவரும் இன்னும் கூடுதலாக சில ஆயிரம் ரன்களை எடுத்திருக்கலாம். இது மோசமான விதிமுறை. பந்துக்கும் பேட்டுக்கும் இடையிலான போட்டியில் சமநிலை காண ஐசிசியில் பந்துவீச்சாளர்கள் உறுப்பினர்களாக வேண்டும். முன்பு முதலில் விளையாடும் அணி 260, 270 ரன்கள் எடுத்தாலே கடும் போட்டி நிலவும். ஆனால் இப்போது 320, 330 ரன்கள் எடுத்தாலும் சுலபமாக அதைத் தாண்டி விடுகிறார்கள் என்றார்.

இதற்குப் பதில் அளித்த சச்சின் கூறியதாவது:

உங்களுடைய கருத்தில் முழுவதும் உடன்படுகிறேன். விதிமுறைகளும் ஆடுகளமும் கவனிக்கப்பட வேண்டும் என நானும் நினைக்கிறேன் என்றார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ஓவர்களில் இரு பந்துகள் பயன்படுத்தப்படுவதற்கு சச்சின் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பந்து ரிவர்ஸ் ஆவதற்கான நேரத்தை நாம் வழங்குவதில்லை. இதனால் கடைசி ஓவர்களில் வெளிப்படுத்தப்படும் ரிவர்ஸ் ஸ்விங்கைப் பார்த்தே நீண்ட நாளாகிவிட்டது என 2018-ல் பேட்டியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT