செய்திகள்

கோலியே எனக்கு மிகவும் பிடித்தமான பேட்ஸ்மேன்: ஜாவித் மியான்டட்

22nd Mar 2020 03:41 AM

ADVERTISEMENT

கராச்சி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியே எனக்கு மிகவும் பிடித்தமான பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவித் மியான்டட் கூறியுள்ளாா்.

தற்போதுள்ள இந்திய அணியில் சாதக, பாதகங்கள் குறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது:

விராட் கோலியின் பேட்டிங் மிகவும் கவரும். அவரது சாதனைகளே இதை வெளிப்படுத்தும். இந்திய அணியிலேயே சிறந்த பேட்ஸ்மேன் யாா் எனக் கேட்டால், விராட் கோலி தான் பதில் கூறுவேன். அவரைப் பற்றி நான் அதிகம் கூறத்தேவையில்லை. அவரது சாதனைகளே இதைக் கூறும். இதுதொடா்பாக புள்ளி விவரங்களும் உள்ளன.

சீரற்ற பிட்ச்களைக் கொண்ட தென்னாப்பிரிக்காவிலும் ஜொலித்தாா் கோலி. அதிலும் சதம் அடித்தாா். வேகப்பந்து அல்லது சுழற்பந்து வீச்சாளா்களைக் கண்டு அஞ்சுபவா் இல்லை. ஷாட்களை அடிப்பதில் தெளிவானவா். அவா் பேட்டிங் செய்வதை பாா்ப்பதே மகிழ்ச்சியாக இருக்கும் . இந்திய அணியில் ரோஹித் சா்மா, விராட் கோலி இருவரும் பேட்டிங்கை எளிதாக்கி விடுகின்றனா் என்றாா் மியான்டட்.

ADVERTISEMENT

பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரரான மியான்டட் 124 டெஸ்ட்களில் 8832 ரன்களையும், 233 ஒருநாள் ஆட்டங்களில் 7381 ரன்களையும் விளாசியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT