செய்திகள்

கடைசி நாளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா இங்கிலாந்து அணி?

DIN

3-வது டெஸ்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதால் இந்த டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் வெல்லும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஜூலை 24 அன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்டை டிரா செய்தால் விஸ்டன் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி தக்கவைத்துக் கொள்ளும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை 2-1 என வென்றுவிடும். அயர்லாந்துடனான ஒரு டெஸ்ட் தொடரைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டும் தான் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அல்ஸாரி ஜோசப்புக்குப் பதிலாக ரகீம் கார்ன்வெல் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர், வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றார்கள். 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 111.5 ஓவர்களில் 369 ரன்கள் எடுத்தது. மே.இ. தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் முன்னிலை பெற்றது. பிறகு தனது 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 4-ம் நாளன்று மழை பெய்கிற நிலை இருந்ததால் தனது 2-வது இன்னிங்ஸை விரைவாகவே முடித்துக்கொண்டது.

3-வது டெஸ்டில் வெற்றி பெற மே.இ. தீவுகள் அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணி 3-ம் நாளின் முடிவில் 6 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் எடுத்துள்ளது. எதிர்பார்த்தது போலவே 4-ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி நாளில் மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி. இதன்மூலம் 3-வது டெஸ்டில் வெற்றி பெறுவதோடு விஸ்டன் கோப்பையையும் அந்த அணி கைப்பற்றும். ஆனால் மே.இ. தீவுகள் அணி, இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே போதும் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டு விடும். இதனால் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT