செய்திகள்

தென் ஆப்பிரிக்க வீரருக்கு கரோனா பாதிப்பு: இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு!

DIN

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 3-0 என முற்றிலுமாகக் கைப்பற்றியது. 

டி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. 

முதல் ஒருநாள் ஆட்டம் கேப் டவுனில் இன்று தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில் பரிசோதனைகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து டாஸ் நிகழ்வுக்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு இன்று மீண்டும் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானால் ஞாயிறன்று ஒருநாள் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் தொடருக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் தெ.ஆ. வீரர் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக முதல் ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக் கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT