செய்திகள்

நெ.1 வீரர் டேவிட் மலான்: டி20 தரவரிசையில் அதிகப் புள்ளிகள் பெற்று சாதனை

DIN

இங்கிலாந்து வீரர் டேவிட் மலான், டி20 தரவரிசையில் அதிகப் புள்ளிகளுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்று அசத்தியுள்ளது இங்கிலாந்து அணி. கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. இந்தக் கடினமான இலக்கைச் சிறப்பாக எதிர்கொண்டது இங்கிலாந்து அணி. 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லரும் மலானும் 17.4 ஓவர்களில் இலக்கை விரட்டி ஆச்சர்யப்படுத்தினார்கள். பட்லர், 46 பந்துகளில் 67 ரன்களும் மலான் 47 பந்துகளில் 99 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது. 

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளையும் மலான் வென்றார். இத்தொடரில் 19, 55, 99* என 173 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 161.68.

இந்நிலையில் டி20 தொடரின் முடிவில் ஐசிசி டி20 தரவரிசையில் 915 புள்ளிகளைக் கொண்டுள்ளார் டேவிட் மலான். இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிகப் புள்ளிகளை எடுத்த பேட்ஸ்மேன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 2-ம் இடத்தில் உள்ள பாபர் அஸாமை விடவும் 44 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளார். 2018-ல் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச், 900 புள்ளிகளை அடைந்தார். அதன் பிறகு இந்த இலக்கை எட்டிய வீரர், டேவிட் மலான். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளி டி20 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT