செய்திகள்

ஆஸ்திரேலியாவில் விளையாடும் தமிழக வீரர் நடராஜன்: சான்றோன் என கேட்ட தாய்!

DIN

ஆஸ்திரேலியாவில் கான்பெரா மைதானத்தில் இந்தியாவுக்காக விளையாடி வரும் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் பந்துவீச்சை தொலைக்காட்சியில் பார்த்து அவரது தாய் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு, கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது, அதில் சிறப்பாகப் பந்து வீசியதின் காரணமாக இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு தற்போது கான்பெரா மைதானாத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே  நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியில்  பங்கேற்று உள்ளார்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் ஆரம்பத்தில் சிறப்பான பந்துவீச்சு மூலம் ஒரு விக்கெட் எடுத்துள்ளார் நடராஜன். 

இந்த ஆட்டத்தை சின்னப்பம்பட்டியில் வசிக்கும் நடராஜனின் குடும்பத்தினர், அவர்கள் இல்லத்தில் தொலைக்காட்சி மூலம் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். நடராஜனின் தாய் சாந்தா, சகோதரி தமிழரசி மற்றும் உறவினர்கள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்து வருகிறார்கள். குறிப்பாக நடராஜன் பந்து வீசும்போது கைதட்டி ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். 

இதுகுறித்து நடராஜனின் உறவினர்கள் கூறியதாவது: இந்தச் சிறிய கிராமமான சின்னப்பம்பட்டி என்ற சிறிய ஊர், இன்று உலகளவில் தெரிந்திருக்கிறது என்றால், அது இந்த ஊரில் பிறந்து, தற்போது இந்தியாவிற்காக விளையாடி வரும் நடராஜன் மூலமாகத்தான் என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார்கள். 

நடராஜனின் தாய் சாந்தா கூறியதாவது: சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் நடராஜனுக்கு. ஆனால் நாங்கள் வறுமையோடு இருந்தாலும், நடராஜனின் விளையாட்டு ஆர்வத்திற்குத் தடை விதிக்கவில்லை. இதன் காரணமாக தற்போது மிகப்பெரிய உயரத்தை நடராஜன் எட்டியுள்ளார். இது எங்களுக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்துள்ளது என ஆனந்தக் கண்ணீருடன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT