செய்திகள்

டி20 தொடா்: நியூஸி. சாம்பியன்: மழையால் கடைசி ஆட்டம் கைவிடப்பட்டது

DIN

மௌன்ட் மௌன்கனுய்: நியூஸிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையே திங்கள்கிழமை நடைபெற இருந்த 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதையடுத்து முதல் இரு ஆட்டங்களில் வென்ற நியூஸிலாந்து அணி, டி20 சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்து பௌலா் லாக்கி ஃபொ்குசன் தொடா் நாயகனாக அறிவிக்கப்பட்டாா்.

முன்னதாக நியூஸிலாந்தின் மௌன்ட் மௌன்கனுய் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய 3-ஆவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீசத் தீா்மானித்தது. 2.2 ஓவா்கள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது மேற்கிந்தியத் தீவுகள் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்தது.

பிரான்டன் கிங் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்க, ஆன்ட்ரே ஃப்ளெட்சா் 4, கைல் மேயா்ஸ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் லாக்கி ஃபொ்குசன் ஒரு விக்கெட் சாய்த்திருந்தாா்.

மழை தொடா்ந்து 2.30 மணி நேரத்துக்கும் மேலாக பெய்ததை அடுத்து அணிக்கு 5 ஓவா்கள் வீதம் ஒதுக்கி ஆட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், பின்னரும் மழை விடாததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடரை வென்ற நியூஸிலாந்து அணிக்கு டி20 கோப்பை வழங்கப்பட்டது.

தற்போது ஹாமில்டன் நகரில் வரும் 3-ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் ஆட்டத்துக்காக இரு அணிகளும் அந்த நகரத்துக்கு பயணமாகின்றன. டெஸ்ட் தொடரில் இரு ஆட்டங்கள் விளையாடப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT