செய்திகள்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பாட்மிண்டன் வீராங்கனை

14th Aug 2020 11:58 AM

ADVERTISEMENT

 

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஹைதரபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் சிக்கி ரெட்டி பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் சிக்கி ரெட்டியும் அவருடைய பிஸியோதெரபிஸ்ட் கிரணும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சாய் அமைப்பு கூறியுள்ளது.

இதையடுத்து கோபிசந்த் அகாடமி மூடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிக்கி, கிரண் ஆகிய இருவருக்கும் அறிகுறிகள் எதுவுமில்லை. இருவரும் தங்களுடைய வீட்டிலிருந்து தினமும் அகாடமிக்கு வந்துள்ளார்கள். கிருமி நாசினி தெளிப்பதற்காக அகாடமி தற்போது மூடப்பட்டுள்ளது. சிக்கி, கிரணுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சாய் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அகாடமியின் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சாய் அமைப்பு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் அச்சமின்றி மீண்டும் பயிற்சியில் பங்கேற்கலாம் எனப் பயிற்சியாளர் கோபிசந்த் கூறியுள்ளார்.

கோபிசந்த் அகாடமியில் ஆகஸ்ட் 7 முதல் பி.வி. சிந்து உள்பட பல வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT