செய்திகள்

கிரிக்கெட் அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கும்

22nd Sep 2019 02:01 AM

ADVERTISEMENT

இளம் வீரர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க இந்திய அணி நிர்வாகம் கூடுதல் காலஅவகாசம் வழங்கும் என்று நம்புவதாக என்று இந்திய வீரர்  ஷிகர் தவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை மேலும் கூறுகையில், "அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களின் திறமைகளை நிரூபிக்க முயற்சிக்கும் போது அதற்கான நல்ல களத்தை ஏற்படுத்தி தருவது அவசியம். ஏனெனில், தங்களின் திறமையை வெளிப்படுத்திக் காட்ட சிறிது காலம் பிடிக்கும். அவர்கள் திறமையை நிரூபிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம் கூடுதல் கால அவகாசம்  வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
அணியில் விளையாட 4 அல்லது 5 முறை கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு இளம் வீரர்கள் தங்களின் திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT