செய்திகள்

மயங்க் அகர்வால், விராட் கோலி, ரோஹித் சர்மா: இரட்டைச் சத நாயகர்கள் புரிந்த புதிய சாதனை!

20th Oct 2019 05:19 PM

ADVERTISEMENT


மயங்க், விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் மூன்று இந்திய வீரர்கள் இரட்டைச் சதம் அடிப்பது இதுவே முதன்முறை என்ற சாதனையைப் புரிந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா இரட்டைச் சதம் அடித்து மிரட்டியுள்ளார். இதேபோல் இந்த தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் மயங்க் அகர்வாலும், இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் விராட் கோலியும் இரட்டைச் சதம் அடித்துள்ளனர். இதன்மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் இரட்டைச் சதம் அடிப்பது இதுவே முதன்முறை என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

மயங்க் அகர்வால் இரட்டைச் சதம் அடித்ததன்மூலம், இரட்டைத் சதம் அடிக்கும் 23-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். விராட் கோலி இரட்டைச் சதம் அடித்ததன்மூலம், அதிக இரட்டைச் சதம்  (7) அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் சதம் மற்றும் இரட்டைச் சதம் இரண்டையும் சிக்ஸர் மூலமே அடித்து ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT