செய்திகள்

விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியே தீருவேன்: மூயின் அலி சபதம்

29th Jun 2019 02:31 PM | Raghavendran

ADVERTISEMENT

 

இந்திய கேப்டன் விராட் கோலி விக்கெட்டை நிச்சயம் வீழ்த்தியே தீருவேன் என்று இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மூயின் அலி தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. அரையிறுதிக்கு தகுதிபெற இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி மிக முக்கியமானது.

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்ற மூயின் அலி, தி கார்டியன் பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையில்,

ADVERTISEMENT

இந்திய அணியின் ரன் மெஷினாக விராட் கோலி திகழ்கிறார். அவரைப் போன்ற ஒரு வீரரின் விக்கெட்டை வீழ்த்த எதிர்பார்த்துள்ளேன். எனவே இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை நிச்சயம் வீழ்த்தியே தீருவேன். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு தொடரில் விராட் கோலி 4 அரைசதங்கள் எடுத்துள்ளார். எனவே இங்கிலாந்துடனான போட்டியில் அவர் சதமடிப்பார் என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதனிடையே அனைத்து ரக கிரிக்கெட்டிலும் சேர்த்து விராட் கோலியை மூயின் அலி 6 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT