செய்திகள்

இலங்கை, நியூஸிலாந்து தொடர் அறிவிப்பு

6th Jul 2019 10:21 AM | Raghavendran

ADVERTISEMENT

 

இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து, ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதையடுத்து டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் ஆகஸ்ட் 29-ஆம் தேதி டி20 பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.

டெஸ்ட், டி20 தொடர் அட்டவணை விவரம் பின்வருமாறு:

ADVERTISEMENT

  • முதல் டெஸ்ட்: ஆகஸ்ட் 14-18, காலே
  • 2-ஆவது டெஸ்ட்: ஆக்ஸ்ட 22-26, பி.சாரா ஓவல் கொழும்பு
  • முதல் டி20: ஆகஸ்ட் 31, ஆர்பிஐசிஎஸ் கொழும்பு
  • 2-ஆவது டி20: செப்டம்பர் 2, ஆர்பிஐசிஎஸ் கொழும்பு
  • 3-ஆவது டி20: செப்டம்பர் 6, பிஐசிஎஸ் கொழும்பு

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் முதன்முறையாக கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT