செய்திகள்

100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்: இந்தியா போட்டி குறித்து வங்கதேச கேப்டன் எச்சரிக்கை

2nd Jul 2019 09:37 AM | Raghavendran

ADVERTISEMENT

 

இந்தியா, வங்கதேசம் மோதும் உலகக் கோப்பை லீக் போட்டி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. 7 புள்ளிகளுடன் இருக்கும் வங்கதேசதம் அரையிறுதியில் நுழைய இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடனான வெற்றி முக்கியமானதாக நிலவுகிறது. அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 476 ரன்களும், 10 விக்கெட்டுகளும் குவித்து உலகக் கோப்பையின் முக்கிய வீரராகத் திகழ்கிறார். 

இந்நிலையில், இந்தியாவுடனான போட்டி குறித்து வங்கதேச கேப்டன் மஷ்ரஃபி மோர்டாஸா, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

நடப்பு உலகக் கோப்பையில் எங்களின் நிலை என்ன என்பது அடுத்த 2 ஆட்டங்களில் தெரிந்துவிடும். இருப்பினும் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே விளையாடி வருகிறோம். ஷகிப் அல் ஹசன் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரராகத் திகழ்கிறார்.

ADVERTISEMENT

எங்களது பேட்டிங் வலிமையாக உள்ளது. எனவே அதில் மாற்றம் இருக்காது. நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுடன் இன்னும் கூடுதல் கவனத்துடன் விளையாடி இருக்க வேண்டும். 

இந்த தொடரில் இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. எனவே அவர்களுடனான சவால் மிகக் கடுமையாக இருக்கும். எனவே வீரர்கள் அனைவரும் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டியது மிக அவசியம் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT