ஸ்பெஷல்

பிப்ரவரி 24: மூன்று இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்ட நாள்!

24th Feb 2021 01:05 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் வரலாற்றில் பிப்ரவரி 24 மிக முக்கியமான நாள். இந்த நாளில் மூன்று இரட்டைச் சதங்கள் அடிக்கப்பட்டு மூன்று சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

பிப்ரவரி 24, 2010

இந்த நாளை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாது.

ADVERTISEMENT

ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டைச் சதத்தை அடித்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்.

குவாலியரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டைச் சதத்தை அடித்தார் சச்சின் டெண்டுல்கர். 147 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் இந்தச் சாதனையை அவர் படைத்தார். 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்த இந்திய அணி அந்த ஆட்டத்தை 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு முன்பு ஜிம்பாப்வேயின் சார்லஸ் கவண்ட்ரியும் பாகிஸ்தானின் சயித் அன்வரும் அடித்த 194 ரன்களே அதிகபட்ச ஒருநாள் ரன்களாக இருந்தன. அந்தச் சாதனையை சச்சின் முறியடித்தார்.

சச்சினுக்குப் பிறகு 7 இரட்டைச் சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்டுள்ளன (அவற்றில் மூன்றை ரோஹித் சர்மா அடித்துள்ளார்). எனினும் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் எடுக்கலாம் என பேட்ஸ்மேன்களின் மனத்தில் விதையைத் தூவியது சச்சின் தான். 

பிப்ரவரி 24, 2013

2013-ல் சென்னையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்தார் தோனி. இதன்மூலம் டெஸ்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றார். 265 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளுடன் 224 ரன்கள் எடுத்தார் தோனி. 

பிப்ரவரி 24, 2015

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்தார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயில். இதன்மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் இரட்டைச் சதம் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 147 பந்துகளில் 16 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 215 ரன்கள் எடுத்தார் கெயில். 

Tags : double century Sachin Tendulkar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT