ஒலிம்பிக்ஸ்

உலக சாம்பியனுக்கு கரோனா: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேற்றம்

29th Jul 2021 03:38 PM

ADVERTISEMENT

 

போல் வால்ட் விளையாட்டில் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கென்ட்ரிக்ஸ், கரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். 

அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது சாம் கென்ட்ரிக்ஸ், போல் வால்ட் விளையாட்டில் நடப்பு உலக சாம்பியனாக உள்ளார். 2017 மற்றும் 2019-ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதலிடம் பெற்றார்.  2016 ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாம் கென்ட்ரிக்ஸ் தங்கப் பதக்கத்தை நிச்சயம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கரோனாவால் தற்போது அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்கஇன்னும் ஒரு வெற்றி பெற்றால்...: பதக்கத்தை நோக்கி நகரும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்

ADVERTISEMENT

சாம் கென்ட்ரிக்ஸுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டோக்கியோவில் உள்ள விடுதியில் சாம் கென்ட்ரிக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதையும் படிக்கஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் யாருக்கு முதலிடம்?: சீனா, அமெரிக்காவுக்குக் கடும் சவாலாக விளங்கும் ஜப்பான்!

போல் வால்ட் போட்டியின் இறுதிச்சுற்று ஆகஸ்ட் 3 அன்று டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT