ஒலிம்பிக்ஸ்

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி: பிசிசிஐ

7th Aug 2021 08:18 PM

ADVERTISEMENT


டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிசிசிஐ பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி வென்ற மீராபாய் சானு மற்றும் ரவிகுமார் தாஹியாவுக்கு தலா ரூ. 50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

வெண்கலம் வென்ற பிவி சிந்து, லவ்லினா மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதுதவிர வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ரூ. 1.25 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. 

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இதுதொடர்பான அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags : Neeraj Chopra
ADVERTISEMENT
ADVERTISEMENT