ஒலிம்பிக்ஸ்

இந்தியாவுக்கு மற்றொரு ஒலிம்பிக் பதக்கம் உறுதி: மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவிக்குமார் தாஹியா

4th Aug 2021 03:04 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தத்தில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் 23 வயது ரவிக்குமார் தாஹியா, கசகஸ்தானைச் சேர்ந்த  நுரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் கசகஸ்தான் வீரர் 9-2 என முன்னிலை பெற்றார். எனினும் பிறகு சிறப்பாக விளையாடி அதை 9-7 எனக் குறைத்தார் ரவிக்குமார் தாஹியா. காயமடைந்த நுரிஸ்லாம், புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தபோதும் ரவிக்குமாரின் ஆக்ரோஷ ஆட்டத்தால் இறுதியில் வீழ்ந்தார். 

அரையிறுதிச் சுற்றில் ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT