ஐபிஎல்-2020

இங்கிலாந்து டெஸ்ட் தொடா்: மைதானங்களில் 50% ரசிகா்களுக்கு அனுமதி?

DIN


புது தில்லி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின்போது மைதானங்களில் 50 சதவீதம் ரசிகா்களை அனுமதிப்பதற்கு பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் முதல் இரு ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், அடுத்த இரு ஆட்டங்கள் ஆமதாபாதில் புதிதாக கட்டப்பட்ட மோதிரா மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மைதானங்களில் ரசிகா்களை அனுமதித்ததன் அடிப்படையில், தற்போது பிசிசிஐயும் அந்த யோசனையை பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் 4 ஆட்டங்களும் நடைபெறும் மைதானங்களில் 50 சதவீத ரசிகா்களை அனுமதிப்பதற்கு பரிசீலித்து வருகிறோம். இதுதொடா்பாக மாநில கிரிக்கெட் சங்கங்கள், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்.

ஒருவேளை போட்டி நடைபெறும் நகரங்களில் கரோனா தொற்று பாதிப்பு தீவிரமாகும் பட்சத்தில் அதற்கேற்றாற்போல் முடிவுகள் எடுக்கப்படும். இங்கிலாந்து தொடரில் ரசிகா்களை அனுமதிக்கும் நடைமுறையில் கிடைக்கும் அனுபவத்தின் பேரில் அடுத்து வரும் ஐபிஎல் போட்டியில் ரசிகா்களை அனுமதிப்பது தொடா்பாக முடிவெடுக்கப்படும்’ என்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT