ஐபிஎல்-2020

ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி: கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் அசத்தல்

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸின் அசத்தல் பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 12-வது ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தன.

175 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் ஸ்மித் களமிறங்கினர். முதல் 2 ஆட்டங்களில் அரைசதம் அடித்த ஸ்மித் இந்த முறை 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சாம்சனும் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த சரிவிலிருந்து மீள்வதற்குள் பட்லர் 21 ரன்களுக்கு மவி பந்தில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தானின் பிரதான பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதால் 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில் தத்தளித்தது ராஜஸ்தான். 8-வது ஓவரை வீசிய நாகர்கோடி, உத்தப்பா மற்றும் பராக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இதனால், 43 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான்.

முந்தைய ஆட்டத்தில் ஹீரோவாக ஜொலித்த தெவாதியா இந்த ஆட்டத்தில் 1 சிக்ஸர் மட்டுமே அடித்த நிலையில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஷ்ரேயஸ் கோபால் 5 ரன்கள், ஆர்ச்சர் 6 ரன்கள், உனத்கட் 9 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.

டாம் கரண் மட்டும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் கடைசி வரை நின்று விளையாடி கடைசியில் அதிரடி காட்டினார். இதன்மூலம், 35-வது பந்தில் அவர் அரைசதத்தை எட்டினார். எனினும், ராஜஸ்தானால் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. டாம் கரண் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார். 

இதன்மூலம், கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணிக்கு நடப்பு சீசனில் இதுவே முதல் தோல்வி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT