ஐபிஎல்-2020

தமிழக வீரர் நடராஜன் அடுத்தடுத்து வீசிய யார்க்கர் பந்துகள்: பிரெட் லீ, சேவாக் பாராட்டு

30th Sep 2020 11:41 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

முன்னதாக முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன் மிக அற்புதமாகப் பந்துவீசி தனது அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

அதிலும் ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் அடுத்தடுத்து யார்க்கர் பந்துகளை வீசி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடராஜன். 14 மற்றும் 18-வது ஓவர்களை அவர் வீசியபோது 10 யார்க்கர் பந்துகளை வீசியதால் தில்லி அணி ரன்கள் எடுக்க மிகவும் தடுமாறியது. யார்க்கர் பந்தை வீசுவது மிகவும் கடினம் என அனைவரும் எண்ணுகிற நிலையில் நடராஜனின் பந்துவீச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸி. முன்னாள் வீரர் பிரெட் லீ, நடராஜன் பற்றி ட்விட்டரில் கூறியதாவது:

கடைசிப் பகுதியில் இப்படித்தான் பந்துவீச வேண்டும். அபாரம் நடராஜன் என்றார்.

இந்திய முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்ததாவது:

நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். யார்க்கர் பந்துகளை அற்புதமாக வீசியுள்ளார் என்றார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT