ஐபிஎல்-2020

பாண்டே அரைசதம்: கொல்கத்தாவுக்கு 143 ரன்கள் இலக்கு

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 8-வது ஆட்டத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில் சொதப்பிய கம்மின்ஸ் இந்த ஆட்டத்தில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன்பிறகு, வார்னருடன் மணீஷ் பாண்டே இணைந்தார். பவுண்டரிகள் அடிப்பதில் சிரமம் இருந்ததால், இந்த இணை களத்தில் ஓடியே ரன்களைச் சேர்த்தது.

இது பெரிய பாட்னர்ஷிப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வார்னர் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து களமிறங்கிய ரித்திமான் சாஹாவால் துரிதமாக ரன் சேர்க்க முடியாததால், ரன் குவிக்கும் பொறுப்பை பாண்டே எடுத்துக்கொண்டார். சிறப்பாக விளையாடி வந்த பாண்டே 35-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்தவுடனே அவர் ரஸல் வேகத்தில் வீழ்ந்தார். அவர் 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, முகமது நபி வந்த வேகத்தில் 2 பவுண்டரி அடித்தார். சாஹா கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணித் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, பேட் கம்மின்ஸ் மற்றும் ரஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT