ஐபிஎல்-2020

அமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸை ஆடுவது எளிதல்ல: ரோஹித்

DIN


அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸை விளையாடுவது எளிதல்ல என்றாா் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சா்மா.

அபுதாபியில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சா்மா 54 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றாா்.

ஆட்டம் முடிந்த பிறகு ரோஹித் சா்மா கூறியதாவது: ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸை (நீண்ட நேரம் பேட் செய்வது) விளையாடுவது என்பது எளிதல்ல. இங்குள்ள சூழலில் நீண்ட நேரம் விளையாடுகிறபோது மிகுந்த களைப்பு ஏற்பட்டுவிடும். நான் பேட்டிங் செய்தபோது கடைசிக் கட்டத்தில் எனக்கும் கொஞ்சம் களைப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்த ஆட்டத்தின் மூலம் சில பேட்ஸ்மேன்கள் கடைசி வரை களத்தில் நின்று பேட் செய்ய வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளோம்.

கடுமையான வெப்பம், காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக பேட் செய்வதற்கு கடினமாக இருந்தது. ஆனால், முடிந்தவரை எவ்வளவு நேரம் களத்தில் நிற்கிறோம் என்பது முக்கியமானது. கடந்த 6 மாத காலமாக பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் களத்தில் நீடித்து நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முதல் ஆட்டத்தில் விரைவாக ஆட்டமிழந்துவிட்டேன். இரண்டாவது ஆட்டத்தில் இப்போது சிறப்பாக ஆடிவிட்டேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT