ஐபிஎல்-2020

7-ம் நிலை வீரராகக் களமிறங்கியது ஏன்?: தோனியின் பதில்

23rd Sep 2020 10:22 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் வீரா் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்தாா். ஸ்மித் 47 பந்துகளில் 4 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். ஜோஃப்ரா ஆா்ச்சா், லுங்கி என்கிடி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸா்களை அடித்தார். 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஸ்கோர் 216 என உயர்வதற்கு அவர் முக்கியக் காரணமாக இருந்தார். பின்னா் ஆடிய சென்னை அணியில் டூபிளெசிஸ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தபோதும், அந்த அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. 

இந்த ஆட்டத்தில் 7-ம் நிலை வீரராகக் களமிறங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் தோனி. ஐபிஎல் தொடங்கி இந்த 12 வருடங்களில் 6 முறை மட்டுமே 7-ம் நிலை வீரராகக் களமிறங்கி அவர் விளையாடியுள்ளார். இதற்கான காரணமாக தோனி கூறியதாவது:

ADVERTISEMENT

நீண்ட நாள்களாக நான் விளையாடவில்லை. 14 நாள் தனிமைப்படுத்துதலும் இதற்கு உதவவில்லை. இந்தப் போட்டியில் நிதானமாகவே விளையாட ஆரம்பித்துள்ளேன். மேலும் சில வித்தியாசமான உத்திகளையும் கடைப்பிடிக்க எண்ணுகிறோம். அதனால் தான் சாம் கரண், ஜடேஜாவை நடுநிலை வீரர்களாகக் களமிறக்கினோம். இதுபோன்று உத்திகளை நாங்கள் மேற்கொண்டு பல வருடங்களாகிவிட்டது. 

போட்டியின் ஆரம்பத்தில் இதனை முயற்சி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. போட்டியின் பிற்பகுதியில் மூத்த வீரர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். மற்றபடி ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும் அணியாகவே நாங்கள் உள்ளோம். இப்போது புதிய முயற்சிகளைச் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கருதினேன். இது பலன் அளிக்காவிட்டால் எங்களுடைய பழைய உத்திகளை மீண்டும் கடைப்பிடிப்போம் என்றார்.

Tags : MS Dhoni Chennai Super Kings
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT