ஐபிஎல்-2020

தொடக்கம் முதலே தடுமாறிய கொல்கத்தா: மும்பை அபார வெற்றி

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. 

196 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஷுப்மன் கில் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். முதல் ஓவரையே போல்ட் சிறப்பாக வீசி ரன் ஏதும் கொடுக்கவில்லை. இதையடுத்து, கொல்கத்தா அணியின் ரன் ரேட் பெரிதளவில் உயரவில்லை. இந்த நெருக்கடியில் முதல் விக்கெட்டாக கில் 7 ரன்களுக்கு போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நரைனும் 9 ரன்னுக்கு பேட்டின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கேப்டன் கார்த்திக் மற்றும் நிதிஷ் ராணா சற்று பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை ஈடுகட்ட முடியவில்லை. மும்பையும் இதற்கேற்றவாறு சிறப்பாக பந்துவீசியது. சற்று நேரம் தாக்குப்பிடித்த கார்த்திக் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ராணாவும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இயான் மார்கன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் களமிறங்கினர். இந்த இணையாலும் மும்பை பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. விளைவு ரஸல் 11 ரன்னுக்கு பூம்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மார்கனும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

எனினும், கம்மின்ஸ் மட்டும் கடைசியில் சிக்ஸர்களாக அடித்து அதிரடி காட்டினார். அவரும் 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உள்பட 33 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணித் தரப்பில் போல்ட், பேட்டின்சன், பூம்ரா மற்றும் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் போலார்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT