ஐபிஎல்-2020

தேவ்தத் படிக்கல்: கண் முன்னே தெரியும் பிரகாசமான எதிர்காலம்

DIN

இந்த ஐபிஎல் போட்டி சில இளம் வீரர்களுக்கு முக்கியமானது. அவர்கள் அடுத்தக்கட்டத்துக்குச் செல்வதற்கு ஐபிஎல்-லிலும் நன்றாக விளையாடினால் தான் உண்டு. 

உள்ளூர் போட்டிகளில் கடந்த ஒரு வருடமாகத் தூள் கிளப்பி வரும் தேவ்தத் படிக்கல், தனது முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே முத்திரை பதித்து ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். 

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி வீழ்த்தியது. துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 19.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 153 ரன்களே எடுத்தது. ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த 20 வயது தேவ்தத் படிக்கல், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா். இதனால் ஆர்சிபி அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது.

2012-க்குப் பிறகு ஐபிஎல்-லில் விளையாடும் முதல் ஆட்டத்திலேயே அரை சதமெடுத்தவர் ஒருவர் மட்டும்தான். 2016-ல் பில்லிங்ஸ் அரை சதம் எடுத்தார். ஐபிஎல்-லில் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே அரை சதமெடுத்த கடைசி இந்திய வீரர், ஜாதவ். 2010-ல் எடுத்தார். அதன்பிறகு முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே அரை சதம் எடுத்து அசத்தியுள்ளார் படிக்கல். மேலும், 2008-க்குப் பிறகு முதல் ஆட்டத்திலேயே அரை சதமெடுத்த ஆர்சிபி வீரரும் படிக்கல் தான்.

இதற்கு முன்பு உள்ளூர் போட்டிகளிலும் முதல் ஆட்டத்திலேயே தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் படிக்கல். 

முதல் முதல்தர ஆட்டத்தில் அரை சதம்
முதல் லிஸ்ட் ஏ ஆட்டத்தில் அரை சதம்
முதல் டி20 ஆட்டத்தில் அரை சதம்
முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அரை சதம்

படிக்கல்லின் சாதனை இத்துடன் நிற்கவில்லை. கடந்த ஒரு வருடத்தில் உள்ளூர் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடி கவனம் ஈர்த்தார்.

விஜய் ஹசாரே கோப்பை 2019/20 - அதிக ரன்கள் எடுத்தவர் 

11 இன்னிங்ஸ்
609 ரன்கள்
67.66 சராசரி
81.09 ஸ்டிரைக் ரேட்
2 சதங்கள்
5 அரை சதங்கள்

சையத் முஷ்டாக் அலி கோப்பை 2019/20 - அதிக ரன்கள் எடுத்தவர் 

12 இன்னிங்ஸ்
580 ரன்கள்
64.44 சராசரி
175.75 ஸ்டிரைக் ரேட்
1 சதம்
5 அரை சதங்கள்

பிரகாசமான எதிர்காலம் கண் முன்னே தெரிகிறது அல்லவா! படிக்கல்லின் சாதனைகள் தொடர வேண்டும், இந்திய அணியில் விளையாட வேண்டும் என்கிற ஆசையை ரசிகர்கள் மனத்தில் விதைத்துவிட்டார் படிக்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT