ஐபிஎல்-2020

ஐபிஎல் முதல் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் இதற்கு முன்பு விளையாடியபோது நடந்தது என்ன?

19th Sep 2020 12:48 PM

ADVERTISEMENT

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவது சென்னை அணிக்கு எப்போதுமே சாதகமாக அமைந்துள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் அரையிறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளதால் முதல் ஆட்டத்தில் விளையாடுவதால் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.

அதேசமயம் ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி விளையாடிய போதெல்லாம் ஓர் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் அது அவர்களுக்கு சோகமான முடிவையே தந்திருக்கிறது. 2015-ல் மட்டுமே முதல் ஆட்டத்தில் விளையாடியபோது அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் இந்த நிலையை இந்த வருடம் மாற்றுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி விளையாடியபோது

2009: 7-ம் இடம்
2012: 3-ம் இடம்
2014: 4-ம் இடம் 
2015: சாம்பியன்
2016: 5-ம் இடம்
2018: 5-ம் இடம்
2020: ? 

ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி விளையாடியபோது

2009: அரையிறுதி
2011: சாம்பியன்
2012: இறுதிச்சுற்று
2018: சாம்பியன்
2019: இறுதிச்சுற்று
2020: ?

Tags : IPL opening game
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT