ஐபிஎல்-2020

சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடும்போது எப்போதும் மிகச்சிறப்பாக விளையாடுகிறோம்: பாண்டியா ஆச்சர்யம்

19th Sep 2020 11:22 AM

ADVERTISEMENT

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

இந்த ஆட்டம் பற்றி மும்பை அணி ஆல்ரவுண்டர் பாண்டியா கூறியதாவது:

மும்பை, சிஎஸ்கே அணிகள் மோதும்போது அதை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இரு அணிகளையும் ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். இதனால் தான் இந்த மோதல் சிறப்பு அந்தஸ்த்தைப் பெறுகிறது.

ADVERTISEMENT

எப்படி என்று தெரியவில்லை, சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடும்போது நாங்கள் அனைவரும் சிறப்பாகtஹ் திறமையை வெளிப்படுத்துகிறோம். இதை எப்போதும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என்றார். 

ரோஹித் சர்மா கூறியதாவது: சிஎஸ்கேக்கு எதிரான மோதலை மிகவும் விரும்புகிறோம். எனினும் ஆட்டத்தின்போது அவர்கள் இன்னொரு எதிரணி. அவ்வளவுதான். அப்படித்தான் விளையாட எண்ணுகிறோம். எதிரணியைக் கண்டு மிரள விரும்புவதில்லை என்றார். 

Tags : IPL CSK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT