ஐபிஎல்-2020

பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா டெல்லி? 

DIN


துபை: ஐபிஎல் கிரிக்கெட்டின் 47-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் சன்ரைசர்ஸ் ஹதராபாதை துபையில் செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது. 

இதுவரை ஆடிய 11 ஆட்டங்களில் டெல்லி 7 வெற்றிகளையும், ஹைதராபாத் 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்து வந்துள்ளன. 

அருமையான ஃபார்முடன் வெற்றிநடை போட்டுவந்த டெல்லி அணி, கொல்கத்தா, பஞ்சாபுக்கு எதிராக கடைசி 2 ஆட்டங்களில் கண்ட தோல்வி, அணியின் நம்பிக்கையை சற்றே அசைத்துப்பார்த்தது. எனவே இந்த ஆட்டத்தில் வென்று பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்புடன் டெல்லி களம் காணும். 

டெல்லியின் பேட்டிங் மற்றும் பெளலிங்கில் பெரிதாக திருத்தம் சொல்லும்படியாக ஏதும் இல்லை. அந்த அணி ஒருவரை மட்டுமே நம்பியில்லாமல், தேவை ஏற்படும் நேரங்களில் பிளேயிங் லெவனில் உள்ள பலரும் சிறப்பாக பங்களிக்கின்றனர். எனினும் பேட்டிங்கில் ஷிகர் தவன் தவிர இதர வீரர்கள் மட்டும் சற்று நிலையாக ஆட வேண்டியுள்ளது. பெளலிங்கில் ரபாடா மற்றும் நார்ட்ஜே எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டியுள்ளது. 

ஹைதராபாதைப் பொருத்தவரை, நூலளவு நம்பிக்கையுடன் பிளே-ஆஃப் வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த ஆட்டத்திலும், இனி வரும் ஆட்டங்களிலும் அந்த அணி வென்றாக வேண்டும் என்பதுடன், இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவுகளும் அந்த அணிக்குச் சாதகமாக வேண்டும். 

ஹைதராபாத் பெரிதும் பேட்டிங்கையே நம்பியுள்ளது. அதிலும் பேர்ஸ்டோ, வார்னர், மணீஷ் உள்ளிட்டோரே அணியின் ஸ்கோரில் அதிகம் பங்களிப்பு செய்கின்றனர். விஜய் சங்கர் சிறப்பாக ஆடினாலும், அவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. பெளலிங்கில் ஜேசன் ஹோல்டர் சிறப்பாகப் பந்துவீசுவது பலம். ரஷீத் கான், நடராஜன் ஆகியோரும் எதிரணி விக்கெட்டுகளை சரிப்பதற்கு உதவுகிறார்கள். இதர பெளலர்களும் விக்கெட் வீழ்த்தினால், இவர்களுக்கான பணிச்சுமை குறையும். 

ஆட்ட நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஹைதராபாத் (உத்தேச அணி)
டேவிட் வார்னர் (கேப்டன்), 
ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விராட் சிங், பிரியம் கர்க், 
ரித்திமான் சாஹா, அப்துல் சமத், 
விஜய் சங்கர், முகமது நபி, 
ரஷீத் கான், ஜேசன் ஹோல்டர், 
அபிஷேக் சர்மா, சந்தீப், சஞ்சய் யாதவ்,
ஃபாபியான் ஆலன், பிருத்விராஜ் யாரா,
கலீல் அகமது, சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், 
சித்தார்த் கெளல், நடராஜன், பாசில் தாம்பி. 

டெல்லி (உத்தேச அணி)
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), 
ககிசோ ரபாடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், சந்தீப் லேமிஷேன், இஷாந்த் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், 
ஷிகர் தவன், பிருத்வி ஷா, 
ஷிம்ரோன் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, மோஹித் சர்மா, லலித் யாதவ், 
அவேஷ் கான், அக்ஸர் படேல்,
 துஷார் தேஷ்பாண்டே, ரிஷப் பண்ட், 
ஹர்ஷல் படேல், கீமோ பால், அமித் மிஸ்ரா, 
அன்ரிச் நார்ட்ஜே, டேனியல் சாம்ஸ். 

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாத் 10, டெல்லி 6 ஆட்டங்களில் வென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT