ஐபிஎல்-2020

திட்டமிட்டபடியே விளையாடினோம்:  எம்.எஸ். தோனி

DIN



துபை: திட்டமிட்டபடியே விளையாடியதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார். 

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வென்றது.  சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்து 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்தார். 

ஆட்டத்துக்குப் பிறகு கேப்டன் தோனி கூறுகையில், "பெங்களூருக்கு எதிரான இந்த ஆட்டம் மிகச் சரியானதாக இருந்தது. தொடக்கம் முதல், இறுதி வரை திட்டமிட்டபடியே செயல்பட்டோம். அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினோம். 

பெளலிங்கில் சுழற்பந்துவீச்சாளர்கள் இம்ரான் தாஹிர், மிட்செல் சேன்ட்னர் அருமையாகச் செயல்பட்டனர். சேஸிங்கின்போது ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார். தனக்கு தெரிந்த ஷாட்களை மிகத் திறம்பட விளாசினார். பிளே-ஆஃப் வாய்ப்பு குறித்து கவலை கொண்டிருக்காமல், எஞ்சியிருக்கும் ஆட்டங்களில் இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவது மகிழ்ச்சி' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT