ஐபிஎல்-2020

ஐபிஎல்: முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 75/3

24th Oct 2020 04:30 PM

ADVERTISEMENT

 

தில்லிக்கு எதிராக கொல்கத்தா அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தில்லி கேபிடல்ஸ் அணி 2-ம் இடத்திலும் கொல்கத்தா அணி 4-ம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.

டாஸ் வென்ற தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். நோர்கியோ, ரஹானா ஆகியோர் சாம்ஸ், பிரித்வி ஷாவுக்குப் பதிலாக தில்லி அணியில் இடம்பெற்றுள்ளார்கள். கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மீண்டும் இடம்பிடித்துள்ளார். குல்தீப் யாதவுக்குப் பதிலாக நாகர்கோட்டி விளையாடுகிறார். 

ADVERTISEMENT

இரு வாரங்களுக்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா ஆல்ரவுண்டர் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் அளித்தார்கள். இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் பந்துவீசியபோது அவருடைய முழங்கை ஐசிசியால் அனுமதிக்கப்பட்ட அளவான 15 டிகிரிக்கு மேல் வளைவது கண்டறியப்பட்டது. இதனால் நரைனுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. விதிகளை மீறும் விதத்தில் அவருடைய பந்துவீச்சு ஆக்‌ஷன் மீண்டும் அமைந்தால் இடைக்காலத் தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு நரைனின் பந்துவீச்சுக்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இளம் வீரர் ஷுப்மன் கில் 9 ரன்களில் நோர்கியோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த 5 ஆட்டங்களாக ஷுப்மன் கில்லால் ஒரு அரை சதமும் எடுக்க முடியவில்லை. கடைசியாக அக்டோபர் 10 அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக அரை சதமெடுத்தார். திரிபாதியும் நோர்கியோ பந்துவீச்சில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்றைக்கும் மார்கனுக்கு முன்பு 4-ம் நிலை வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஆனால் 3 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. 9 மற்றும் 10-வது ஓவர்களில் கொல்கத்தா அணி 31 ரன்கள் எடுத்துள்ளது.

Tags : IPL Kolkata Knight Riders
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT