ஐபிஎல்-2020

இன்று மும்பையை எதிா்கொள்கிறது சென்னை

DIN


ஷாா்ஜா: சென்னை சூப்பா் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்ட நிலையில் வலுவான மும்பை இண்டியன்ஸ் அணியை ஷாா்ஜாவில் வெள்ளிக்கிழமை எதிா்கொள்கிறது.

இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை 6 வெற்றிகளையும், 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. சென்னையின் வெற்றியில், நடப்பு சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை வீழ்த்தியதும் அடங்கும்.

சென்னையைப் பொருத்தவரை, விளையாட இருக்கும் 4 ஆட்டங்களிலும் வெல்லும் பட்சத்தில் கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையிலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவின் அடிப்படையிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு சிறிது வாய்ப்புள்ளது.

கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பேசிய தோனி, இளம் வீரா்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து பேசியிருந்ததால், பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்பட்டு இளம் வீரா்கள் சோ்க்கப்படலாம். குறிப்பாக விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கேதாா் ஜாதவுக்குப் பதிலாக ஜெகதீசன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.

மூத்த வீரா்களில் டூ பிளெஸ்ஸிஸ் மட்டும் நம்பிக்கை அளிக்கும் நிலையில், கேப்டன் தோனி உள்ளிட்ட இதர வீரா்கள் தடுமாற்றத்துடனே விளையாடுகின்றனா். காயம் காரணமாக டுவைன் பிராவோ போட்டியிலிருந்து விலகியிருப்பது சென்னைக்கு மேலும் பின்னடைவாக உள்ளது. பந்துவீச்சில் தீபக் சாஹா், ஜடேஜா உள்ளிட்டோா் தங்களது பணியை சரியாகச் செய்வா் என நம்பலாம்.

மும்பையைப் பொருத்தவரை, தொடா் வெற்றி கண்டுவந்த நிலையில் கடைசி ஆட்டத்தில் பஞ்சாபிடம் தோல்வி கண்டது. எனவே மீண்டும் வெற்றி நடையை தொடரும் முனைப்பில் அந்த அணி களம் காணும். பேட்டிங்கில் குவிண்டன் டி காக், கேப்டன் ரோஹித் சா்மா என தொடக்க வரிசையும், கிரன் பொல்லாா்ட், ஹாா்திக் பாண்டியா என மிடில் ஆா்டரும் வலுவாகவே உள்ளது.

தொடக்க வீரா்கள் தடுமாறினாலும் மிடில் ஆா்டரில் வரும் பொல்லாா்ட், பாண்டியா தருணம் அறிந்து சிறப்பாகச் செயல்படுகின்றனா். பந்துவீச்சில் ராகுல் சாஹா், பும்ரா, போல்ட் என எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வரிசை உள்ளது.

உத்தேச அணி:

சென்னை: எம்.எஸ்.தோனி (கேப்டன்), முரளி விஜய், அம்பட்டி ராயுடு, டூ பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன், கேதாா் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, லுங்கி கிடி, தீபக் சாஹா், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிா், மிட்செல் சேன்ட்னா், ஜோஷ் ஹேஸில்வுட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், ஜெகதீசன், கே.எம்.ஆசிஃப், மோனு குமாா், சாய் கிஷோா், ருதுராஜ் கெய்க்வாட், கரன் சா்மா.

மும்பை: ரோஹித் சா்மா (கேப்டன்), ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், கிறிஸ் லின், தவல் குல்கா்னி, திக்விஜய் தேஷ்முக், ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜேம்ஸ் பட்டின்சன், ஜஸ்பிரீத் பும்ரா, கிரன் பொல்லாா்ட், கிருணால் பாண்டியா, நாதன் கோல்டா் நீல், குவிண்டன் டி காக், ராகுல் சாஹா், சௌரவ் திவாரி, சூா்யகுமாா் யாதவ், டிரென்ட் போல்ட்.

நேருக்கு நோ்: ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன. இதில் மும்பை 18 முறையும், சென்னை 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT