ஐபிஎல்-2020

வென்றாக வேண்டிய கட்டாயம்: ராஜஸ்தான் - ஹைதராபாத் இன்று மோதல்

DIN


துபை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் துபையில் வியாழக்கிழமை மோதுகின்றன. 
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 4 வெற்றிகளையும், 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 
இரு அணிகளுமே தங்களது பிளே-ஆஃப் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்வதற்கு நிச்சயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஹைதராபாத் இன்னும் ஒரு தோல்வியை சந்தித்தால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும். ராஜஸ்தான் தோல்வியடையும் பட்சத்தில் அதன் பிளே-ஆஃப் வாய்ப்பு இன்னும் சிக்கலாகும். 
ராஜஸ்தானைப் பொருத்தவரை, பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் குறிப்பிடத்தகுந்த வகையில் செயல்படுகிறார். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்னும் அதிகமாக ரன்கள் சேர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ராஜஸ்தானுக்கான ஸ்கோரை உயர்த்தும் வகையில் நிலையாக ஆடக்கூடிய ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அந்த அணிக்கான முக்கியத் தேவையாக உள்ளது. 
சஞ்சு சாம்சன் சோபிக்காத நிலையில், பென் ஸ்டோக்ஸ் தனது ஃபார்மை எட்ட முடியாமல் தவிக்கிறார். சிறப்பாக செயல்படாத ராபின் உத்தப்பாவுக்குப் பதிலாக மனன் வோராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். 
பெளலிங்கில் ஜோஃப்ரா ஆர்ச்சர் ராஜஸ்தானின் பிரதான நம்பிக்கையாக உள்ளார். சுழற்பந்துவீச்சில் ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கவுள்ளனர். 
ஹைதராபாதைப் பொருத்தவரை, பிரதானமாக பேட்டிங்கையே அந்த அணி நம்பியுள்ளது. ஜானி பேர்ஸ்டோ, கேப்டன் டேவிட் வார்னர், மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் என பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. பந்துவீச்சில் ரஷீத் கான், டி. நடராஜன் உள்ளிட்டோர் எதிரணி ஸ்கோர் செய்ய விடாமல் தடுப்பர் என நம்பலாம். 
மொத்தத்தில் இரு அணிகளிலுமே இளம் வீரர்கள் அதிக அளவில் உள்ளனர். மூத்த வீரர்கள் தடுமாறும் பட்சத்தில் இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும். 

ராஜஸ்தான் (உத்தேச அணி)

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), 
ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், 
சஞ்சு சாம்சன், ஆன்ட்ரு டை, 
கார்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புத், 
ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா, ஜெயதேவ் உனத்கட், மயங்க் மார்கண்டே, ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், டேவிட் மில்லர்,
மனன் வோரா, சஷாங்க் சிங், 
வருண் ஆரோன், டாம் கரன், ராபின் உத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆர்ச்சர். 

ஹைதராபாத் (உத்தேச அணி)

டேவிட் வார்னர் (கேப்டன்), 
ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விராட் சிங், பிரியம் கர்க், ரித்திமான் சாஹா, 
அப்துல் சமத், விஜய் சங்கர், முகமது நபி, 
ரஷீத் கான், ஜேசன் ஹோல்டர், 
அபிஷேக் சர்மா, சந்தீப், சஞ்சய் யாதவ், 
ஃபாபியான் ஆலன், பிருத்விராஜ் யாரா, கலீல் அகமது, சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், 
சித்தார்த் கெளல், பில்லி ஸ்டான்லேக், 
டி. நடராஜன், பாசில் தாம்பி.

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் - ஹைதராபாத் அணிகள் 
12 ஆட்டங்களில் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் 
தலா 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT