ஐபிஎல்-2020

கொல்கத்தாவுக்கு 2-ஆவது வெற்றி

DIN


துபை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-ஆவது லீக்  ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இந்த சீசனில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா, 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்த ராஜஸ்தான், 3-ஆவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 
முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து தோல்வி கண்டது. 
துபையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஷுப்மான் கில்லும், சுநீல் நரேனும் கொல்கத்தாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் கொல்கத்தா 1 ரன் மட்டுமே எடுத்தது. அங்கித் ராஜ்புத் வீசிய 2-ஆவது ஓவரில் ஷுப்மான் கில்  ஒரு சிக்ஸரை விளாசினார். எனினும் 3-ஆவது ஓவரை வீசிய உனட்கட் 4 ரன்களை மட்டுமே கொடுக்க, 3 ஓவர்கள் முடிவில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது கொல்கத்தா. 
உனட்கட் வீசிய 5-ஆவது ஓவரின் 3-ஆவது பந்தில் சிக்ஸரையும், 4-ஆவது பந்தில் பவுண்டரியையும் விரட்டிய சுநீல் நரேன், அடுத்த பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 14 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஷுப்மான் கில்லுடன் இணைந்தார் நிதிஷ் ராணா. இந்த ஜோடி சற்று அதிரடியாக ரன் சேர்த்தது. கொல்கத்தா 10 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்திருந்தபோது, ராணாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்து தெவேதியா பந்துவீச்சில் பிராக்கிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து ஆன்ட்ரே ரஸல் களமிறங்க, மறுமுனையில் அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் எதிர்பாராதவிதமாக ஜோஃப்ரா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். அவர் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். 
இதையடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஷ்ரேயஸ் கோபால் வீசிய 13-ஆவது ஓவரில் ஆன்ட்ரே ரஸல் இரு சிக்ஸர்களை விளாச, 100 ரன்களைக் கடந்தது கொல்கத்தா. இதனிடையே தினேஷ் கார்த்திக் 1 ரன்னில் நடையைக் கட்ட, ஆன்ட்ரே ரஸல் 14 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில் ராஜ்புத் பந்துவீச்சில் உனட்கட்டிடம் கேட்ச் ஆனார். 
இதையடுத்து இயோன் மோர்கனுடன் இணைந்தார் பட் கம்மின்ஸ். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. பட் கம்மின்ஸ் 10 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்சனால் அற்புதமாக கேட்ச் செய்யப்பட்டார். இதையடுத்து வந்த கமலேஷ் நகர்கோட்டி தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரியை விளாச, கடைசி ஓவரில் மோர்கன் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசினார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது கொல்கத்தா.
இயோன் மோர்கன் 23 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள், கமலேஷ் நகர்கோட்டி 5 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 
ராஜஸ்தான் தோல்வி: பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 3 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர்  21 ரன்களில் வெளியேற, ராஜஸ்தான் சரிவுக்குள்ளானது.  பின்னர் வந்த ராபின் உத்தப்பா 2, ரியான் பராக் 1, ராகுல் தெவேதியா 14, ஷ்ரேயஸ் கோபால் 5,  ஜோஃப்ரா ஆர்ச்சர் 6, உனட்கட் 9 ரன்களில் வெளியேறினர்.
 எனினும் கடைசிக் கட்டத்தில் தனிநபராகப் போராடிய டாம் கரன், சுநீல் நரேன் வீசிய 19-ஆவது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி 35 பந்துகளில் அரைசதம் கண்டார். இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. டாம் கரன் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், அங்கித் ராஜ்புத் 5 பந்துகளில் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி, கமலேஷ் நகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 


சுருக்கமான ஸ்கோர்

கொல்கத்தா-174 / 6 

ஷுப்மான் கில்      47 (34)
இயோன் மோர்கன்     34 (23)
ஜோஃப்ரா ஆர்ச்சர்     2வி/18


ராஜஸ்தான்-137/ 9 

டாம் கரன்     54 (36)
ஷிவம் மாவி     2வி/20
நகர்கோட்டி     2வி/13
வருண் சக்ரவர்த்தி     2வி/25

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT