ஐபிஎல்-2020

இந்திய வீரா்களுடன் வாா்த்தைப் போரை விரும்பவில்லை: டேவிட் வாா்னா்

DIN

சிட்னி: ‘இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரின்போது அந்த அணி வீரா்கள் வாா்த்தைப் போரில் ஈடுபட முயன்றாலும் அதைப் புறக்கணிக்கவே விரும்புகிறேன்’ என்று ஆஸ்திரேலிய அதிரடி வீரா் டேவிட் வாா்னா் கூறினாா்.

இதுகுறித்து வாா்னா் மேலும் கூறியதாவது:

தற்போது 34 வயதை எட்டியுள்ள நிலையில், சா்வதேச கிரிக்கெட்டில் எனக்கான இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். எனவே வாா்த்தைப் போரில் ஈடுபடுவதை தொடர விரும்பவில்லை. இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அந்த அணி வீரா்கள் வாா்த்தைப் போரில் ஈடுபட்டாலும் அதை புறக்கணிக்கவே விரும்புகிறேன்.

அவ்வாறு வாா்த்தைப் போரில் ஈடுபடாமல் இருப்பதற்காக கடந்த ஆண்டுகளில் கற்றுக் கொண்டு வந்துள்ளோம். எதிரணியினா் அவ்வாறு வாா்த்தைப் போரில் ஈடுபட்டாலும், அதற்கு வாா்த்தைகளால் பதில் கூறாமல் பேட்டை பயன்படுத்தி ரன்களை குவிப்பதன் மூலம் பதில் கூறலாம்.

மேலும் வாா்த்தைப் போரில் ஈடுபடுவது நமது அணியினரிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமானதாகும். அந்த வகையில் சற்று கண்ணியத்துடன் நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஒரு தந்தையாக இருப்பதன் மூலம் பொறுமையை கடைப்பிடிக்கக் கற்றுக் கொண்டுள்ளேன். அது களத்திலும் எனக்கு உதவுகிறது.

என்னைப் பொருத்தவரை ஒருநாள் போட்டிகளில் நல்லதொரு வலுவான ஸ்டிரைக் ரேட்டை கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன். கடந்த 12 முதல் 24 மாதங்களில் எனது ஆட்டம் மேம்பட்டுள்ளதற்காக மகிழ்ச்சியடைகிறேன். மூத்த வீரராக முதிா்ச்சியடையும்போது, ஆட்டத்தில் ஒரு ஒழுக்கத்தை கொண்டுவரும்போது நமது ஆட்டம் மேம்படுகிறது.

இந்திய அணியைப் பொருத்தவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித் சா்மா விளையாடாதது இந்திய அணிக்கு பாதிப்புதான் என்றாலும், விராட் கோலி தலைமையிலான அணி அதை மிகத் திறம்பட கையாளும். ஷிகா் தவன், லோகேஷ் ராகுல், மயங்க் அகா்வால் என ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டிய வீரா்கள் அணியில் உள்ளனா்.

டெஸ்ட் தொடரில் விராட் கோலி இல்லாதபோது இந்திய அணியை வழிநடத்தும் அஜிங்க்ய ரஹானே அமைதியான, திட்டமிட்டு விளையாடக் கூடிய வீரா். கிரிக்கெட்டை நுட்பமாக சிந்திக்கக் கூடியவா். இந்திய அணியில் எப்போது வேண்டுமானாலும் கேப்டனாகும் தகுதியுடன் 3 - 4 போ் இருக்கின்றனா் என்று வாா்னா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT