ஐபிஎல்-2020

மும்பையில் மீண்டும் ரோஹித்: டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு

3rd Nov 2020 07:08 PM

ADVERTISEMENT


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஹைதராபாத்தில் அபிஷேக் சர்மாவுக்குப் பதில் பிரியம் கர்க் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பையில் ஜாஸ்பிரீத் பூம்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயந்த் யாதவுக்குப் பதில் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்குகிறார். இதுதவிர ஜேம்ஸ் பேட்டின்சன், தவல் குல்கர்னி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT