ஐபிஎல்

குங்ஃபு பாண்டியாவை குறைத்து மதிப்பிடாதீர்கள்: ஹார்திக் மனைவி

30th May 2022 10:11 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2022 கோப்பையை ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது குறித்து ஹார்திக்கின் மனைவி நடாஷா தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி திடலில் நடைபெற்றது. அனைவரும் எதிர்பார்த்திருந்த இறுதி ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

படிக்கஐபிஎல் இறுதிப்போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதுப் பெற்ற கேப்டன்கள் விவரம்

ADVERTISEMENT

இதனால், கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்றது குறித்து அவரது மனைவி நடாஷாவும் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரை வென்றது தொடர்பாக தொடர்பாக ஹார்திக் பாண்டியாவின் நேர்காணல் காணொலியை நடாஷா பகிர்ந்துள்ளார். அதில், ஹார்திக் பாண்டியா தனது அணியை தன்னுடைய பாணியில் கொண்டுவருவதற்கு அவர் மேற்கொண்ட சிரமங்கள் குறித்து விளக்கியுள்ளார். இந்த காணொலியைப் பகிர்ந்து ''ஹார்திக்  குங்ஃபு பாண்டியாவை குறைத்து மதிப்பிடாதீர்கள்'' எனக் குறிப்பிட்டு நடாஷா பகிர்ந்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT